டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தற்போது பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடிமகன்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜூன்-1 ஆம் தேதி டெல்லி அரசு அறிவித்தது.
எனவே மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய விரும்பும் வியாபாரிகள், நிறுவனங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது, இருப்பினும் உடனடியாக மதுபானங்களை டெலிவரி செய்ய முடியாது. முதல் கட்டமாக வியாபாரிகள் இதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அனுமதி கிடைத்தவுடன் மது டோர் டெலிவரி சேவையை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.