மசினகுடி பகுதியில் உள்ள மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப் படுகின்றதா? என ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் இயற்கை அழகை பாதுகாப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படும் நடைமுறையானது அமலில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கடை உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆட்சியரிடம் விளக்கம் தந்தனர். இதையடுத்து காலி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து பாட்டில்களை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் காலி மதுபாட்டில்கள் வாங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.