புத்தாண்டை முன்னிட்டு மதுக்கடைகள் குறித்த முக்கிய அறிவிப்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மது விற்பனை இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது பிரியர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி கொலம்பியாவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பில் மதுபான விடுதிகள், மதுபானம் விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் மதுபானம் விற்கும் மளிகைக்கடைகளும் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அதிக கவனம் தேவைப்படும் ஒருசில இடங்களில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதாரத்துறை மேற்க்கொண்டுள்ள இந்த அவசர நடவடிக்கைகளை மீதமுள்ள நகரங்களிலும் செயல்படுத்தலாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.