தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் அவரின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. சமீபகாலமாக ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த தனுஷிற்கு சரியான நேரத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கைகொடுத்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.