Categories
மாநில செய்திகள்

‘மதரீதியாக என்னை தாக்குகிறார்கள்’ தமிழ்நாட்டின் வெதர்மேன் வருத்தம்..!!

மத ரீதியாகவும் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானிலை அறிக்கையை வெளியீடு இணையத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இந்நிலையில் இணையத்தில் சிலர் இவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்த மிரட்டலில் வானிலை சொல்லுமளவுக்கு தனக்கு தகுதியில்லை என்றும், மேலும் என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

வானிலை ஆய்வு மையத்தின் மீது அவதூறு பரப்புகிறார். எனவே அவரை அடித்துக் கொல்ல வேண்டும் என்று கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர். மத ரீதியாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஸ்கிரீன்ஷாடை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப் ஜான்: “நான் எனது பணியை விரும்பி செய்து வருகிறேன். வானிலை ஆய்வு மையத்தை குறிப்பிட்டு நான் எதையும் பேசவில்லை.

நான் அதற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறேன். எனது பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து அதை பார்க்க வேண்டாம். நான் ஒரு சாதாரண ஆள், சிலரின் அவதூறும், அநாகரிகமான பேச்சுக்கள் என் இதயத்தை வருத்துகிறது. சில நபர்கள் என்னை கொலை செய்ய வேண்டும் கூறுகிறார்கள். அது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் விதத்தில் உள்ளது. இந்துக்களுக்கு எதிராகவே குற்றம்சாட்டுவதாக கூறிவருகின்றன. குறிப்பாக அத்திவரதர் வெளியே வந்த தருணத்தில் போதிய மழை பெய்யவில்லை என்று துல்லியமாக அதனை அட்டவணையை வெளியிட்டதால் பாஜகவினர் கடுப்பானதாக சொல்லப்படுகிறது.”

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் ‘தனது பக்கத்தில் வெதர்மேன் பிரதீபை ஜாதி மத ரீதியில் அவதூறு செய்வதும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று பதிவிட்டு வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதனை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |