Categories
தேசிய செய்திகள்

மதம் மாறி திருமணம் செய்தால்… இவருடைய அனுமதி தேவை… வருகிறது புதிய சட்டம்..!!

காதல் திருமணம் செய்வதற்கு கலெக்டரின் அனுமதி தேவை என்ற புதிய சட்டம் வருகிறது.

மதம் மாறி காதல் திருமணம் செய்பவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைவரின் அனுமதி பெறவேண்டும் என்று புதிய அவசர சட்டதிற்கு உத்தரபிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். காதல் திருமணங்கள் மூலம் பெண்கள் ஏமாற்றி மதம் மாற்ற படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து உ.பி அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஏமாற்றி திருமணம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 3 வருடம் வரை சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விருப்பத்தின் பேரில் மதம் மாறி காதல் திருமணம் செய்பவர்கள் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தங்களுடைய திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்து 2 மாதங்கள் கழித்து அது உண்மையாக இருந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் தெரிவிக்கிறது.

Categories

Tech |