Categories
சினிமா தமிழ் சினிமா

மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்…. எந்த மதம் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சாய் தீனா. இவர் ஒரு விளம்பரப்பலகை கலைஞராக பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார். கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். படத்தில் மட்டும் தான் அவர் வில்லன்.

ஆனால் நிஜத்தில் அவரது பேச்சு சமூக அக்கறை கொண்டதாக இருக்கும். இந்நிலையில், அவர் பிக்கு மவுரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். புத்த மதத்திற்கு மாறிய பிறகு குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Categories

Tech |