மண் வளத்தை காக்க ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வு பைக் உலக பயணம் கோவையில் இன்று தொடங்கியுள்ளார்.
மார்ச் 25ஆம் தேதி லண்டனிலிருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறார். இதற்கிடையில், ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐநாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) நடத்தும் cop 15 இந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அதில் 170க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இதற்கு முன்னதாக கோவையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவுக்கு செல்லும் அவர் அங்குள்ள பல சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பயணிக்கும் அவர் 9 ம் தேதி முதல் பதினொரு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறார். தனது இந்த பயணம் பற்றி ஜக்கி வாசுதேவ் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, உலக மண் வளத்தை பாதுகாப்பதற்காக மண்வளம் இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம்.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விஞ்ஞானிகளும், அமைப்புகளும், மண்வளம் இழப்பதால் ஏற்படும் போகும் பேராபத்து பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். 2045 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக அதிகரித்துவிடும் எனவும் ஆனால் உணவு உற்பத்தி தற்போது இருப்பதை விட 40 சதவீதம் குறைந்து விடும் எனவும் கூறுகின்றனர்.இதன் காரணமாக 192 நாடுகளில் மண்வளப் பாதுகாப்பு குறித்த கொள்கையும், சட்டங்களையும் உருவாக்க நாங்கள் வலியுறுத்த உள்ளோம். மேலும் இதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறோம், எனவும் 730 அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மண்வளப் பாதுகாப்பு அம்சமாக சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறோம்.
இந்த முயற்சியினால் ஐநாவின் அங்கமாக இருக்கும் UNCCD,UNEP,WFP ஆகிய மூன்று அமைப்புகள் ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர். மேலும் உலக அளவில் பிரபலமான இசைக் கலைஞர்கள் விளையாட்டு வீரர்கள் சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் பல சவால்கள் இருக்கிறது ஐரோப்பாவில் தொடங்கியிருக்கிறது. அரேபிய நாடுகளில் மே மாதம் பயணிக்கும்போது வெயில் உச்சத்தை தொட்டிருக்கும் இந்தியாவிற்குள் நுழையும் போது பருவமழை ஆரம்பிக்கும் எனவும் இது தவிர தற்போது போர் நடக்கிறது. போர் நடக்கும் நாடுகளின் எல்லைகள் ஒட்டிய பகுதிகள் வழியாக பயணிக்க வேண்டிய தேவையும் ஏற்படும் மண் வளத்தை மீட்டு எடுக்கும் இந்த முக்கியமான பணியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.