மத்திய பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் உள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கலை மற்றும் பழம்பெரும் கலாச்சார அமைப்பை சேர்ந்தவர்கள் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு சிவன் மற்றும் பிரம்மாவின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷ்ணு சிலை கல்சுரிக் காலத்தின் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
40 அடி நீளமுள்ள இந்த சிலை சேஷாயி வடிவமைப்பில் உள்ளது. பாசி மற்றும் அழுக்கு போன்றவை இந்த சிலையின் மீது படிந்து உள்ளதால் சிலைக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் நீராவி முறையில் சிலையை சுத்தம் செய்து வருகின்றனர். அதோடு இந்த சிலைகளை பல்வேறு கோணங்களிலும் புகைப்படமெடுத்து ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அவற்றின் காலம் உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.