Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணுக்குள் புதையும் அபாயம்…. வீடுகளில் கடும் விரிசல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடுக்கூடலூர் பகுதியில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதேபோல் சில வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இருக்கிறது.

இதனால் வீடுகளில் தங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை அடுத்து எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |