Categories
மாநில செய்திகள்

“மண்டலம் மேன்மை விருது” வழங்கும் விழா….. தபால்துறை மூலம் 9 லட்சம் கோடிகள் விற்பனை….. அஞ்சல் துறை தலைவர் பெருமிதம்…..!!!!

சென்னை நகர மண்டலத்தில் தபால் துறையின் 2021-2022 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய கிளைகள், அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ‘மண்டலம் மேன்மை விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஒட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல் துறை இயக்குனர் கே.சோமசுந்தரம் முன்னிலையை வகித்தார். தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை பி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தினார். அதனை தொடர்ந்து 75 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறக் கூடிய வகையில் இந்த விழாவில் 75 விருதுகள் வழங்கப்பட்டது. அதில் 25 விருதுகள் கோட்டங்கள், உட்கோட்டங்கள், அஞ்சல் அலுவலர்களுக்கும், 50 விருதுகள் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்டது. தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை பொறுத்தவரையில் சிறப்பாக பணியாற்றிய தபால்காரர், டிரைவர், துறைமுகவர் என பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

அதன்படி சிறந்த தபால்காரர்களுக்கான விருதை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தின் டி.சந்தியாவுக்கும், அதனை போல மண்டலத்தில் சிறந்த பெண் ஊழியருக்கான விருதை ஷகிலாவுக்கும் வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும் வருவாய் ஈட்டுவதில் சிறந்து விளங்கும் கோட்டங்களில் தாம்பரம், வடசென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் பி.செல்வகுமார், தபால் துறையில் சிறந்த முறையில் பணியாற்றுவர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இது மற்றவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் மத்திய அரசின் வீடு தோறும் மூவர்ணம் என்ற திட்டத்துக்காக தமிழக தபால் துறை மூலம் ரூ.9 லட்சம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது. அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கிறது. தேசிய கொடியின் தரத்தில் பிரச்சினை வந்தது. அதன் பிறகு அது சரி செய்யப்பட்டது. தமிழக அரசின் உரிமையாளர்களுக்கு ‘டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்’ தபால் துறை வீடு தேடி சென்று வழங்கி வருகிறது. மேலும் இதுவரை 1 1/2 லட்சம் பேருக்கு குறுகிய காலத்தில் வழங்கி சாதனை செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |