Categories
தேசிய செய்திகள்

“மணல் கடத்தல்” தடுக்க முயன்ற போலீஸ்…. டிராக்டர் ஏற்றி கொலை….!!

மணல் கொள்ளையை தடுக்க முயற்சித்த போலீஸ் கான்ஸ்டபிளை டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்தவர் சோனு சௌந்தரி. 2019 சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளான இவர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது மணல் திருடி டிராக்டரில் கொண்டு சென்ற கும்பலை விரட்டி பிடிக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் அவர் மீது அந்த கும்பல் டிராக்டரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றது.

இதனால் சம்பவ இடத்திலேயே சோனு பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் சோனுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |