டிராக்டர் கவிழ்த்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் டிராக்டர் ஓட்டுநரான நேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாங்கண்ணி அருகேயுள்ள தனியார் இறால் பண்ணையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிராக்டரில் மணலை அள்ளி கரைக்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்துவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த நேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேந்தரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.