ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணமகன் உட்பட மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நயாபுரா கல்வெட்டிலிருந்து கீழே கவிழ்ந்தது. இதில் மணமகள் உட்பட காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து காரில் இருந்து 7 உடல்களையும் ஆற்றிலிருந்து இரண்டு உடல்களையும் மீட்டெடுத்தனர். தொடர்ந்து அந்தக் கார் கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்டது. இந்த சம்பவம் இன்று காலை எட்டு 8.30 மணி அளவில் நடந்திருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது.
Categories
“மணமகன் உட்பட 9 பேரை பலி வாங்கிய கோர விபத்து….!!” பெரும் பரபரப்பு சம்பவம்…!!
