புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1997-ஆம் வருடம் இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது தனியார் நிறுவனம் சார்பாக யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட அந்த யானை தினம் தோறும் கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் அந்த யானைக்கு அருகம்புல், பழம் போன்றவற்றை வழங்கி வந்தனர்.
இதனையடுத்து யானை லட்சுமி பக்தர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. வழக்கம் போல் இன்று காலை காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு யானை லட்சுமி அழைத்து செல்லப்பட்டபோது திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.