Categories
மாநில செய்திகள்

“மட்டன் பிரியாணியில் மட்டனுக்கு பதில் கரப்பான் பூச்சி”….. அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!!

ஆரணியில் அசைவ ஹோட்டலில் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் நேத்தம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு வந்தனர். அவர்கள் மட்டன் பிரியாணி சாப்பிடக் கொண்டிருந்தபோது சாப்பாடில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கடை ஊழியர்களிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே சிக்கன் பிரியாணி, சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று நடந்த இந்த சம்பவத்தால் ஆரணியில் அசைவ உணவு பிரியர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளன. உணவு பாதுகாப்புத்துறையினர் கண்துடைப்புக்கு ரைடு செய்யாமல் தொடர்ந்து ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |