மஞ்சிமா மோகன், அவருக்கும் பிரபல நடிகருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரபல நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் நடித்தபோது கௌதமுக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின.
இந்நிலையில் மஞ்சிமா மோகன் மலையாள ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது கூறியுள்ளதாவது, “மூன்று வயதில் சினிமாவுக்கு வந்தேன். வாழ்க்கையில் நடந்த எந்த முக்கியமான சம்பவத்தையும் இதுவரையில் மக்களிடம் மறைப்பதில்லை. எனது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வையும் பொதுமக்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி. என் வாழ்க்கையின் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இச்செய்தி வெளிவந்த போது நான் மறுக்கவே செய்தேன். ஆனால் இது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன.இது எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. பிறகு நான் இதை கண்டுகொள்ளவில்லை. இந்நிகழ்வில் பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும் என நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். இந்நிலையில் பரவிய வதந்தி அனைத்துக்கும் முடிவு கட்டியுள்ளார் மஞ்சிமா மோகன்.