Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மஞ்சள் பை விழிப்புணர்வு” பள்ளி மாணவர்கள் கையில் பாதாகை ஏந்திக் கொண்டு ஊர்வலம்…!!!

மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீராணம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பாலித்தீன் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மஞ்சள் பை ஊர்வலம் நடந்தது. இதற்கு துணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி, முஸ்லீம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி, வீராணம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பாதாகைகள், மஞ்சள் பை போன்றவற்றை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் இதில் கிராம பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், கவுன்சிலர்கள் கிருஷ்ணம்மாள், ஷேக் முகமது, பஞ்சாயத்து துணை தலைவர் ஜமீலா, தி.மு.க கழக துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |