சிவன் சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின்போது அங்குள்ள ஒரு தொட்டியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 14-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை சிரவண மாதம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே வாரணாசி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அங்குள்ள சிவன் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் 2-வது ஆக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மசூதியில் சிவலிங்கம் இருந்தாலும் அங்கு இந்துக்கள் போய் வழிபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு வருகிற ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.