Categories
உலக செய்திகள்

மசூதிக்குள் அத்துமீறி நுழைந்த… மர்ம நபர்களின் வெறிச்செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் என்ற நகரில் உள்ள ஒரு  மசூதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்நிலையில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் 5 பேர் சகோதரர்கள் என்றும், மீதம் உள்ளவர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நில தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை அரங்கேறியுள்ளது என தெரியவந்துள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் மிகவும் சாதாரணமாக நடந்து வருகிறது என்றும், அங்குள்ள மக்கள் பல தலைமுறைகளாக பழங்கால நெறிமுறைகளின் அடிப்படையில் இச்செயல்களை செய்து வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |