தொழிலாளியை விபச்சாரத்திற்கு அழைத்த மசாஜ் சென்டர் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிடில் முத்து தெருவில் ஆஷிக்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆஷிக் நாமக்கல் செல்லும் சாலையில் இருக்கும் மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மசாஜ் சென்டரின் மேலாளரான ரதீஷ் என்பவர் 2000 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார்.
மேலும் 1500 ரூபாய் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ரதிஷ் கூறியுள்ளார். அதற்கு உடன்படாத ஆஷிக் 2000 ரூபாய் கொடுத்து மசாஜ் மட்டும் செய்துவிட்டு விபச்சாரத்திற்கு அழைத்தது தொடர்பாக நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மசாஜ் சென்டர் மேலாளர் ரதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.