இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா-2 படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2011- ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா. இந்த படம் இவரது 50-வது படமாகும். வெங்கட் பிரபு எழுதி இயக்கியிருந்த இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், திரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிளவுட் நைட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் .
Mankatha 😬 https://t.co/20QGOyaR1P
— venkat prabhu (@vp_offl) August 24, 2021
இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘எந்த படம் உடனடியாக இரண்டாம் பாகம் தயாராக வேண்டும்’ என கேட்டுள்ளார். இதற்கு வெங்கட் பிரபு ‘மங்காத்தா’ என பதிலளித்துள்ளார். இதனால் மங்காத்தா-2 உருவாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.