Categories
தேசிய செய்திகள்

மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பாஜக…. கேஎஸ்.அழகிரி…..!!!!

அதுமட்டுமல்லாமல் நேற்று முதல் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி, கடந்த ஓராண்டு காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என்று குறிப்பிட்டு, இந்நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.

Categories

Tech |