தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். இவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கே.எஸ் அழகிரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டவர் திண்டிவனம் ராமமூர்த்தி. அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.