Categories
தேசிய செய்திகள்

மக்கள் பிரச்சனை எத்தனையோ உள்ளது… அதற்கு சட்டசபையில் தீர்வு காண வேண்டும்… வெங்கையா நாயுடு பேட்டி…!!!

காவேரி, மேகதாது அணை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளது. அதை குறித்து நாம் சட்டசபையில் பேச வேண்டும். அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

வெங்காய நாயுடு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “நாம் எப்பொழுதும் தாய் மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் தான் பேச வேண்டும். மத்திய அரசு தற்போது இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் தாய்மொழி வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் தாய் மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன். நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியில் காரணமாக சட்டசபை தொடர்ந்து முடங்கியது.

அது மட்டுமில்லாமல் மத்திய மந்திரிகள் கையில் இருந்த ஆவணங்களை கிழித்து எறிந்து மிகப்பெரிய கலாட்டா செய்துள்ளனர். சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு சில உறுப்பினர்கள் தரம் தாழ்ந்து செயல்பட்டது மிகவும் வேதனைக்குரியது. மேலும் மேகதாது, காவிரி பிரச்சினை உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்சினைகள் எத்தனையோ உள்ளது. அது குறித்து நாம் கட்டாயம் சட்டசபையில் பேச வேண்டும். அதற்கு தீர்வு காண வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |