Categories
மாநில செய்திகள்

மக்கள் நலனே முக்கியம்…! அடுத்தடுத்து ரெடியாகும் சென்னை…! பரபரப்பாக இயங்கும் தமிழக அரசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2வது அலையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நியமித்து சென்னையில் பல்வேறு இடங்களில் 100 பெட், 200 பெட், ஆயிரம் பெட் என்று, ட்ரிபிள் சி-க்கு கொரோனா நல மையத்தை உருவாக்கினார்கள். கொரோனா சிறப்பு கவனிப்பு மையங்கள் மூலம் பெரிய அளவில் அந்த வீடுகளிலே தொற்று ஏற்பட்டவர்கள் தனியறையில் தங்க இயலாதவர்கள், அவர்களுக்கெல்லாம் இந்த கொரோனா நல மையம் பெரிய அளவில் மிகவும் உதவிகரமாக இருந்தது.

எனவே நம்முடைய துணை துறையின் செயலாளருக்கு ஒன்றிய அரசின் செயலாளர்  ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த 2-வது அலைக்கு எப்படி இந்த ட்ரிபிள் சி ஏற்படுத்தினார்களோ, அதேபோல் இந்தியா முழுவதும் இப்போது ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் முதல் கட்டமாக சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் மண்டலத்துக்கு ஒன்று என்ற வகையில் கிரடாய் அமைப்புக்கு நம்முடைய ஆணையர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் மாநகராட்சி சார்பிலேயே ஏற்கனவே இஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை ஆகிய இடங்களில் 800 படுக்கைகளை  தயார் செய்து இருக்கின்றார்கள். அது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு நாட்களில் ட்ரேட் சென்டரில் இன்னும் 800 படுக்கைகளை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருகிறார்கள். அது போல இன்னும் பல்வேறு இடங்களில் கடந்த மே மாதமும், ஜூன் மாதமும் சென்னையில் எங்கே எல்லாம் இந்த் ட்ரிபிள் சி இருந்ததோ அங்கே எல்லாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் இந்த ஸ்கீரினிங் சென்டர் அதாவது தொற்று தன்மையைக் கண்டறிய கூறி அந்த ஸ்கீரினிங் சென்டர் ஏற்கனவே 22 இடங்களில் சென்னை மாநகரில் செயல்பட்டு வந்தது. அதில் 15க்கு மேற்பட்ட இடங்களை பொறுத்தவரையில் பள்ளிகளில், கல்லூரிகளில் இருந்தது. இப்போது இந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், விடுதிகளிலும் மாணவர்கள் தங்கி இருக்கின்ற சூழ்நிலையில் ஆணையர் அவர்கள் அனைத்து உதவி ஆணையர் அவர்களுக்கும் ஒரு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே இருந்த சென்டருக்கு பக்கத்திலேயே திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், அரசின் மருத்துவமனைகள் எங்கே எல்லாம் இருக்கிறதோ அவைகளை கண்டறிந்து அங்கே இந்த ஸ்கீரினிங் சென்டரை உடனடியாக திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

அதுபோல் இங்கே ரிப்பன் மாளிகையின் வளாகத்திலேயே கோவிட் கண்ட்ரோல் ரூம் உருவாக்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது பெரிய உபயகரமாக கடந்த அலையின் போது பயன்பாட்டில் இருந்தது. இந்த கோவிட் கண்ட்ரோல் ரூமை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை ஏ.சி.கேப் அவர்களின் மூலம் உடனடியாக உத்தரவிட்டு அதற்கான பணிகளை உடனடியாக செய்ய சொல்லி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |