பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது முடக்கம் வேண்டாம் மக்கள் சாகட்டும் எனக் கூறியிருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டுமென பெண் ஒருவர் எதிர்ப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க 3வது பொது முடக்கம் அமல்படுத்துவதை விட ஆயிரக்கணக்கான நபர் சாகட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்ட நிலையிலும் இந்த செய்தி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வேல்ஸில் உள்ள Rhondda Cynon Taf பகுதியைச் சேர்ந்த Mountjoy என்ற பெண் பிரதமர்ப போரிஸ் ஜான்சன் கருத்துக்கு பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் இவ்வாறு கூறியது எனது கோபத்தை தூண்டியுள்ளது என்றும் கொரோனாவால் எனது தாய், தந்தை, சகோதர்களை இழந்த வேதனைகளை அறிந்தால் மட்டுமே அவரால் இவ்வாறு கூற முடியாது எனவும் கூறினார். மேலும் உறவுகளை இழந்து இருக்கும் நேரத்தில் இந்த கருத்துக்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் இவ்வாறு அவர் கூறியிருந்தால் பிரதமராக இருக்க அவருக்கு தகுதி இல்லை உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.