Categories
உலக செய்திகள்

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…32 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!!!!

துருக்கியில் நடைபெற்ற சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டு அடுத்தடுத்த சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்திருக்கின்ற நிலையில் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக தகவல் இதுவரை தெரியவில்லை. சனிக்கிழமை காலை காஜியாண்டெப் மாகாணத்தின் தெற்கு நகரமான நிசிப் அருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முதல் விபத்தில் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்கு பின் மார்டினில் மக்கள் கூட்டத்தின் மீது மற்றொரு லாரி ஒன்று மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்து இருக்கின்றனர் என துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெட்டின் கோகா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் மாட்டின் மாகாணத்தின் டெரிகேட் நகரில் நடைபெற்ற சம்பவம் லாரியின் பிரேக் பழுதானதால் ஏற்பட்டது அதனால் கூட்டத்தை தாக்கியுள்ளது எனக் கூறியுள்ளார். மொத்தமாக மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதனை  தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கு அவசர கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அனடோலு  செய்தி நிறுவனம் கூறியுள்ளது. துருக்கியில் சனிக்கிழமை நடைபெற்ற விபத்தில் 32 பேர் உயிரிழந்தது மட்டுமல்லாமல் 51 பேர் காயமடைந்திருப்பது வெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |