ஜெர்மனி நாட்டில் மக்கள் கூட்டத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜெர்மனி நாட்டில் பெர்லினின் சார்லட்டன்பர்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மக்கள் கூட்டத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் 12 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “மக்கள் கூட்டத்தின் மீது மோதியுள்ளது. கார் தொடர்ந்து ஒரு கடையின் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.