Categories
தேசிய செய்திகள்

மக்கள் ஊரடங்கு ; நாடு முழுவதும் கைதட்டல் ஒலித்தது – முதல் வெற்றி…. பிரதமர் மோடி நிகிழ்ச்சி!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்துள்ளனர்.

மேலும் இந்த உத்தரவை பின்பற்றிய பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று மாலை சரியாக 5 மணிக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே வந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பலரும் வீதிகளிலும், மொட்டை மாடிகளிலும் நின்ற படி கை தட்டிய காட்சி உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தன்னலமற்று பணியாற்றுவோர்களுக்கு கைதட்டி மக்கள் பாராட்டி வருவது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு படை வீரர்கள் வாகனங்களின் சைரனை ஒலிக்க விட்டு தங்கள் ஆதரவை கொடுத்தனர். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள மோடி , வைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த நாடு நன்றி தெரிவிக்கிறது. கொடிய நோயை எதிர்த்து போராடும் நீண்ட நெடிய போாராட்டத்தில் நமக்கு கிடைத்த முதல் வெற்றி இது என கூறியுள்ளார்.

Categories

Tech |