மக்களை நேரில் சந்தித்து உங்கள் பகுதி குறைகளை கேட்டறியும் படி மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இந்த ஏழு மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தது, ஐந்து மாநிலங்களிலாவது வெற்றி பெறாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலு பெற்று விடும் என பாஜக தலைமை கருதுகிறது.
இதனை லோக் சபா தேர்தல் போன்றே நாம் எதிர் கொள்ள வேண்டும் எனவும் அதனால் மத்திய அமைச்சர்களுக்கு மோடி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போதுதான் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது, தேசிய நிர்வாகிகள், எம்.பி.,க்களும் மக்களை நேரில் சந்திக்க வேண்டும்.ஏழைகள், நடுத்தர மக்கள், கட்சியின் கிளை கமிட்டி நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று உணவருந்த வேண்டும். ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தையும் பயன்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.