Categories
மாநில செய்திகள்

“மக்களை பற்றி கவலைப்படாத முதல்வர்”…. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு….!!!!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது “10 வருடங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் அவை கானல் நீரானது. மொத்தம் 525 தேர்தல் வாக்குறுதி வெளியிட்டார். எனினும் அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கியாஸ் சிலிண்டர் மானியம், கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய்.1,000 உள்ளிட்ட எத்திட்டமும் நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்களை தான் இன்று இவர் தொடங்கி வைக்கிறார்.

வேறு எந்த புது திட்டமும் கொண்டுவரவில்லை. மத்தியஅரசு பெட்ரோல்- டீசல் விலையை குறைத்தவுடன் தமிழகம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் விலை குறைக்கப்பட்டது. மத்திய அரசை குறை கூறுவதுதான் இவருக்கு வேலை. இவருக்கு மக்களை பற்றி கவலையில்லை. கடுமையான மின்கட்டண உயர்வு, வீட்டு வரி 100 % உயர்த்தப்பட்டுள்ளது. எதில் கமிஷன், கலெக்சன், கரப்சன் வருமோ அதனை தான் பார்க்கிறார்கள். நாட்டு மக்களை பற்றி கவலையே இல்லை. மக்களை பற்றி கவலைப்படாத முதல்வர். ஏன் எங்களுக்கு வரிஉயர்வு செய்ய தெரியாதா..? மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒரு ஆட்சியாளன் மக்களின் நிலையை உணர்ந்து அதற்குத் தக்கவாறு ஆட்சிபுரிய வேண்டும். அது தான் உண்மை, ஆட்சிக்கு அடையாளம். அதுவே மக்களாட்சியும் ஆகும். அத்துடன் ஜனநாயக முறைப்படி ஆட்சியாகும்” என்று அவர் பேசினார்.

Categories

Tech |