Categories
உலக செய்திகள்

மக்களை கொன்று வரும் மியான்மர் இராணுவம்.. இந்திய தொழிலதிபர் நிதியளிக்கிறாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மியான்மர் இராணுவத்திற்கு இந்திய தொழிலதிபரான அதானி குழுமத்தின் தலைவர் கோடி கணக்கில் நிதியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மியான்மரின் பொருளாதார கழகமான MEC என்ற நிறுவனத்திற்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய தொழிலதிபர், அதானி குழுமம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வளவு தொகையை நில குத்தகை கட்டணமாக வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் யாங்கோன் பிராந்தியத்தின் முதலீட்டு ஆணையத்திலிருந்து வெளிவந்துள்ளது.  அதாவது அதானி குழுமம் பணத்தை அளித்திருப்பது மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் MEC நிறுவனத்திற்கு என்பது குறிப்பிடத்தக்கது. மியான்மர் ராணுவம் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவது, ரோஹிங்கியா இனப்படுகொலை, போர் குற்றங்கள் ஆகிய குற்றங்களுக்காக நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றின் விசாரணையின் கீழ் இருக்கிறது.

மேலும் மியான்மர் ராணுவத்திற்கு இந்த ராணுவ நிறுவனங்கள் நேரடி முறையில் தேவையான நிதியை அளிக்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முறைகள் வெளிப்படையாக இதனை அறிவித்த பின்பும் அதானி குழுமம் MEC உடன் தங்கள் ஒப்பந்தத்தை கைவிட மறுக்கிறது.

அமெரிக்க அரசு MEC நிறுவனத்திற்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. எனவே ஆஸ்திரேலிய அரசு வருங்காலத்தில் 3.2 மில்லியன் டாலர் தொகையை அதானி துறைமுகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதால், அதற்கு சிக்கல் உண்டானது. மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் தடையையடுத்து அதானி துறைமுகத்தினுடன் ஆஸ்திரேலிய அரசு செய்ய உள்ள முதலீடும் தடை செய்யப்படும் என்று தெரிகிறது.

ஆனால் அதானி குழுமம் மியான்மர் ராணுவத்துடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்து வருகிறது. மேலும் ராணுவ தலைமையை நாங்கள் சந்திக்கவில்லை என்று மியான்மர் கூறுகிறது. ஆனால் இதனை பொய்யாகும் வகையில் கடந்த 2019 ஆம் வருடத்தில் அதானி துறைமுகத்தின் உரிமையாளர் மற்றும் மியான்மர் ராணுவ ஆட்சி குழுவின் உயர் ஜெனரல் ஆகியோர் சந்தித்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

Categories

Tech |