மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.
நடிகர் சித்தார்த் தனது முதல் படமான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி புகழ் பெற்றவர். தமிழ் தெலுங்கு இந்தி என்று பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் தற்போது ஒரு கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசை நீங்கள் கொரோனா போராளி அல்ல, உண்மையில் நீங்கள் கொரோனாவின் கூட்டாளி. எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களை கொலை செய்கிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.