Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே… 3 நாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரியில் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கோரோன அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் பொங்கல் விடுமுறையான ஜனவரி 15 முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு யாரும் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இருந்து புதிதாக உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் மீண்டும் தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |