தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்கள் அனுமதி அளிப்பதாக தொல்பொருள் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
தாஜ்மஹால் இந்தியாவில் உள்ள நினைவு சின்னங்களுள் மற்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. இது காதலின் சின்னமாக புகழ்பெற்றது. முகலாய மன்னனான ஷாஜகான் இறந்து போன அவரது மனைவி மும்தாஜுக்கா இந்த கட்டிடத்தை கட்டி உள்ளனர்.
ஷாஜகானின் 367 வது உர்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்களுக்கு இலவச அனுமதி அளிக்கப் போவதாக ஆக்ரா தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 தாஜ்மஹாலை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறைதான் தரைத்தளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் இவர்களின் கல்லறையை காண அனுமதிக்கப் படுவார்கள் எனவும் நுழைவு கட்டணமாக ரூபாய் 45 ரூபாய்1250 வரி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.