வங்கிகளுக்கு இந்த மாதம் 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் தவறானது என வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்று இணையதளங்களில் வெளியான தகவலானது தவறானது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், வங்கிகளுக்கு விடுமுறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். தமிழகத்தில் அக்டோபரில் மொத்தம் பத்து நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. இதில் அரசு பொதுவிடுமுறை என்பது மூன்று நாட்கள் மட்டும் தான்.
தமிழகத்தில் இந்த மாதம் 4ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 5ஆம் தேதி விஜயதசமி, 24ஆம் தேதி தீபாவளி என 3 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை. இது தவிர, 2வது மற்றும் 4வது சனி வழக்கம் போல வங்கிகளுக்கு விடுமுறை. அக்., 2 ஞாயிறு அன்று வந்ததால் தேசிய விடுமுறை இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.