நடப்பாண்டின் மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டின் மார்ச் மாதம் 8 ஆம் தேதி புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியினை ஆப்பிள் நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் சிலிகானுடன் புதுப்பிக்கப்பட் மேக் மினி ஒன்றும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாதத்தின் 15 நாட்களுக்குள் ஐ.ஓ.எஸ் 15 னையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 5 ஜி இணைப்பு, புதிய ஐபோன், ஐபேட் ஏர் போன்றவற்றையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.