Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு…. இறுதிப்பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த இறுதி பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி ஆட்சி அமைத்து ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக அலுவலர்கள் கலந்து கடன் பெற தகுதியுள்ளவர்களின் பட்டியல்  தயார் நிலையில் இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அலுவலர்களின் சரிபார்ப்புக்கு பின் இரண்டாம் கட்டமாக வெளிமாவட்ட அதிகாரிகள் பட்டியலை சோதனை செய்துள்ள நிலையில் இறுதியாக தணிக்கை துறை இந்த பட்டியலை உறுதி செய்திருக்கிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் செக்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் குறித்து சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிகுமார் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது தேனி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, வேலூர் மாவட்ட தணிக்கை துறையை சேர்ந்த தணிக்கை அலுவலர்கள் 81 பேர் சேலம் மாவட்டத்தில் நகை கடன் பெற தகுதியானவர்களை துல்லியமாக சரிபார்த்து இருக்கின்றன. இன்னும் 224 சங்கப் பணியாளர்கள் பட்டியல் மட்டுமே சரிபார்க்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் முடிந்து அரசு முறையாக  அறிவித்த பிறகு தகுதியுடையவர்களுக்கு கடன் நிலுவை இல்லை என சான்றிதழ் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |