Categories
தேசிய செய்திகள்

மக்களே! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.5000…. அதிரடி அறிவிப்பு…!!!

சாலை விபத்துகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் உயிரை காப்பாற்றிய மிகவும் தகுதியான பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேசிய அளவில் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு “கோல்டன் ஹவர்” எனப்படும் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களை ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் மூலம் வேண்டிய ஊக்குவிக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து, இந்த திட்டம் செயல்படுத்துவதாக கூறபடுகிறது. இத்திட்டம் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |