Categories
தேசிய செய்திகள்

மக்களே ரொம்ப உஷாரா இருங்க…. இந்தியாவில் கால் பதித்த பிஎஃப்.7 வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

இந்தியாவிலும் பிஎஃப். 7 வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன நாட்டில் ஓமைக்ரானின்  உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தோற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. குஜராத் மாநிலத்தில் உள்ள பயோடெக்னாலஜி  ஆய்வுக்கூடத்தில் பிஎஃப்.  7 வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது பிஏ. 5 வகையின் துணை பிரிவாக கருதப்படுகிறது.

மேலும் தற்போது உலக நாடுகளில் அதிக அளவில் ஆத்திக்கம் செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் திறன் கொண்டவை. எனவே நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கிறதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளனர்.

Categories

Tech |