தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக முன்னா, சோட்டு என்ற பெயரில் புதிய வகை சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளத. இதன் முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியுசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் தொடங்கப்பட உள்ளது அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடைகளில் சிலிண்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் 958 ரூபாயும் 5 கிலோ கேஸ் சிலிண்டர் பெற 1515 ரூபாயும் நுகர்வோர் முதற்கட்டமாக பதிவு செய்து பெற வேண்டும். அதன் பிறகு கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகை மட்டும் செலுத்தி சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம்.