தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தொகை 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அறிவித்துள்ள 13 மளிகை பொருட்கள் பெறுவதற்கான இன்று வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை பெற மக்களின் வீடுகளுக்குச் சென்று இன்று முதல் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. அதன்பிறகு ஜூன் 5-ஆம் தேதி முதல் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.