தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று எட்டாவதாக நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. எனவே இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ஆனது வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.