Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. ஆகஸ்ட் 15 வெளியாகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்….!!!!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த மாதமே துவங்கிவிட்டது. இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
புதிய ஸ்கூட்டர் வெளியீட்டு தேதியை பாவிஷ் அக்ரவால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்து நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என்றும் ஸ்கூட்டர்கள் நேரடியாக வாடிக்கையாளர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |