Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. அடுத்த மாதம் 4 நாட்கள்…. தமிழக மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |