தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது.
கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும் எனவும் இரவில் புழுக்கம் அதிகமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.