தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் மீட்பு பணிகளுக்காக 150 பேர் கொண்ட சிறப்பு குழு தயாராக இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு பணி தேவைப்படும் மக்கள் 1093 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Categories
மக்களே…. மீட்பு பணி தேவைக்கு 1093 என்ற எண்ணை அழைக்கவும்…. அரசு அறிவிப்பு….!!!!