Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த அதிரடி…! மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. கோவை மக்களுக்கு அலர்ட்….!!!!

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் பொது இடங்களுக்கு செல்வோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |