மார்ச்-18 முதல் இலவச காஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் களைகட்டி வருகிறது. உத்திரபிரதேச மாநிலதில் யோகி ஆதித்ய நாத் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசை நீங்கள் கொண்டு வந்தால் மார்ச் 18ஆம் தேதி முதல் உங்கள் வீடுகளுக்கு இலவசமாக வந்து சேரும் எனவும், விவசாயிகளுக்கு 5 வருடங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறி வாக்குகளை சேகரித்தார். மேலும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.